Advertisement

விவசாயியிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி சஸ்பெண்ட்

ADVERTISEMENT
ஈரோடு:ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சாகுபடி செய்யப்படும் பயிர்களை, வன விலங்குகள் சேதம் செய்தால், அதற்கான இழப்பீடு பெற வி.ஏ.ஓ., - ஆர்.ஐ.,யிடம் ஒப்புதல் பெற்று, வேளாண் துறை சான்று இணைக்க வேண்டும்.

இந்த வகையில், கடம்பூரை சேர்ந்த ஒரு விவசாயி, யானைகளால் சேதமான பயிருக்கு சான்றிதழ் கேட்டு, சத்தி வேளாண் உதவி இயக்குனர் வேலுசாமியிடம் முறையிட்டார். சான்றிதழ் தர, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். விவசாயி கெஞ்சி கேட்டும், அந்த அதிகாரி, 'பணம் தந்தால் தான் சான்று தருவேன்' என, கறாராக கூறி விட்டார்.

இதை அந்த விவசாயி, தன் மொபைல் போனில்பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டார்.இதை அறிந்த ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன், வேலுசாமியிடம் நேற்று விசாரித்து, அவரை சஸ்பெண்ட் செய்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement