Advertisement

டி.டி.டி., ஆலோசனை குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

ADVERTISEMENT


சென்னை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில்பல்வேறு மாநிலங்களில் திருமலை போல பெருமாள் கோவில் நிர்மானித்து, நிர்வகித்து வருகிறது.

அந்தந்த மாநிலங்களில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல்பாடுகளை நிறைவேற்றும் வகையில், ஆலோசனைக் குழு தலைவர் நியமிக்கப்படுவர். அந்த பதவி இரண்டு ஆண்டு காலம் வழங்கப்படுகிறது.

அதன்படி, மூன்றாவது முறையாக திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு தலைவராக ஏ.ஜெ.சேகர் நியமிக்கப்பட்டார்.

தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழுவில் இடம் பெறுவதற்காக நான்கு துணைத் தலைவர்கள், 40 உறுப்பினர்களை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி கடந்த மாதம் நியமித்தார்.

அதன்படி, தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு துணைத் தலைவர்களாக ஆனந்தகுமார், சுதந்திரம், வெங்கடசுப்பிரமணியம், மரு ஸ்ரீ சரண் ஆகியோர் மற்றும் 40 உறுப்பினர்கள் நேற்று தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் பதவி ஏற்றனர்.

அதற்கான சான்றிதழ்களை அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆலோசனைக் குழு தலைவர் ஏ.ஜெ.சேகர், உறுப்பினர் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement