Advertisement

விவசாயிகள் மீது பொய் புகார் ரத்து: பா.ஜ., வரவேற்பு

ADVERTISEMENT
ஈரோடு: பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: கோபிசெட்டிபாளையம் கடுக்காம்பாளையத்தில் விவசாயிகள் மீது பொய்யாக புனையப்பட்ட எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்கை ஈரோடு மாவட்ட கலெக்டர் ரத்துசெய்துவிட்டதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இன்று நடைபெறவிருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு பொய்வழக்கிற்கு எதிராக நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சமுதாய நல்லிணக்கத்தை கெடுத்து எஸ்.சி, எஸ்.டி பொய் வழக்கு மூலம் விவசாயிகளை அச்சுறுத்த நினைக்கும் இதுபோன்ற செயல்களுக்கு மாவட்ட நிர்வாகம் துணை போனதை விவசாயிகள் மற்றும் அனைத்து சமுதாய மக்களின் போராட்ட எழுச்சி தடுத்து நிறுத்தியிருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் நாகராஜ் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement