Advertisement

ராவ் பகதுார் ஆரி கவுடர் 130 வது பிறந்த நாள் விழா



ஊட்டி : ஊட்டியில் ராவ் பகதுார் ஆரிகவுடரின், 130 வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஊட்டி என்.சி.எம்.எஸ்., வளாகத்தில் அமைந்துள்ள ஆரிகவுடர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஆரிகவுடர் நினைவு விழாக்குழு தலைவர் படுகதேச பார்டி நிறுவனர் மஞ்சை மோகன் தலைமை வகித்து பேசுகையில், ''விவசாயிகள் நலன் கருதி, 90 ஆண்டுகளுக்கு முன்பு என்.சி.எம்.எஸ்., நிறுவனத்தை தொடங்கிய ஆரி கவுடரின் பிறந்த நாளை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. படுக சமுதாயம் அல்லாது அனைத்து சமுதாயத்தை பற்றியும் சிந்தித்து, மக்களுக்காக உழைத்தவரின், 130வது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுவது பெருமையாக உள்ளது,''என்றார்.

எம்.சி.எம்.எஸ்., நிறுவன மேலாண்மை இயக்குனர் முத்துக்குமார், ஆரிகவுடரின் பேரன் விங் கமாண்டர் ஜெயபிரகாஷ், பேத்தி தாரா ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், நாக்கு பெட்டா முன்னாள் தலைவர் பேராசிரியர் ஐய்யாரு மற்றும் ஊட்டி நகர படுகர் நல சங்க செயலாளர் மகாலிங்கம் உட்பட, பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement