Advertisement

அரசு என்ன செய்ய வேண்டும்?

ADVERTISEMENT


ஜவுளிப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கும் திறன், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும் திறன் இவை இரண்டும், சரியான அளவீட்டிற்கு வரும் வரை, மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் ஜவுளித்துறை சார்ந்த அனைவரும் செயல்பட வேண்டும்.

அதுவரை ஜவுளித்தொழிலை நாம் அழியாமல் பாதுகாப்பதோடு, இதை நம்பி இருக்கும் பல லட்சம் பேருக்கு, வேலை இழப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கான முயற்சியில், ஜவுளித்தொழில் சங்கிலியில் உள்ள, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

- ராஜ்குமார், தலைவர்

அகில இந்திய ஜவுளி கூட்டமைப்பு பருத்தி அபிவிருத்திக்கழகம் (சி.டி.ஆர்.ஐ.,)

இறக்குமதியை தவிர்க்க வேண்டும்

சீனா, வங்கதேசம், வியட்நாம், இலங்கையிலிருந்து துணி, ஆடை, படுக்கை விரிப்பு, பருத்தி பஞ்சு, விஸ்கோஸ் பஞ்சு, பருத்திநுால், பாலியெஸ்டர் நுால், விஸ்கோஸ் நுால், பாலியெஸ்டர் துணிகள், ஆடைகள், விரிப்புகள் ஆகியவற்றின் இறக்குமதி தவிர்க்கப்பட வேண்டும்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மின் கட்டண உயர்வை தமிழக அரசு ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும். மத்திய அரசு, பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். கொரோனா கடனை ஆறாண்டாக நீட்டிக்க வேண்டும். முதன்மை கடன் தொகையை திருப்பி செலுத்துவதிலிருந்து ஓராண்டுக்கு விலக்களிக்க வேண்டும்.

- சுந்தர்ராமன், தலைவர்

தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா)



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement