Advertisement

செனட் உறுப்பினராக தலைமையாசிரியர் நியமனம்



சூலூர் : பாரதியார் பல்கலை செனட் உறுப்பினராக அரசுபள்ளி தலைமையாசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சூலூர் அடுத்த அரசூர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றுபவர் கண்ணன்.

இவர், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்புடன் பள்ளியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையின் பேரில், பாரதியார் பல்கலை செனட் உறுப்பினராக, மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

செனட் உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ள தலைமையாசிரியர் கண்ணனுக்கு, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழுவினர், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement