Advertisement

சிட்டி கிரைம்

உதவி பொதுமேலாளர் மீட்புகோவை: பீளமேடு முருகன் நகரை சேர்ந்தவர் சுரேஷ், 43. கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள நகைக்கடையில், உதவி பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். கடையின் வரவு, செலவு கணக்குகளை சுரேஷ் கவனித்து வந்தார். சில நாட்களுக்கு முன், 20 கிலோ தங்க கட்டி மும்பையில் இருந்து வந்தது.

இதில், நான்கு கிலோ தங்க கட்டி குறித்து, எந்த கணக்கும் இல்லை. இந்நிலையில், நகைக்கடை பொது மேலாளர் அருண்குமார் மற்றும் ஊழியர்கள், சங்கர், கார்த்திக் உட்பட மேலும் ஐந்து பேர், சுரேஷிடம் விசாரித்தனர்.

இதில் இருதரப்புக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. தங்க கட்டி கிடைக்காத நிலையில், ஐந்து பேரும், சுரேஷிடம் அவரது கார், வீட்டு பத்திரங்கள், நகைகளை கேட்டு பல மணி நேரம் தனியறையில் அடைத்து தொந்தரவு செய்துள்ளனர்.

சுரேஷ் மனைவி தனது கணவரை காணவில்லை என, வெரைட்டி ஹால் ரோடு போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் சென்று சுரேஷை மீட்டுள்ளனர். மாயமான தங்கக்கட்டி குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

குழந்தை பலி; போலீசார் விசாரணைகோவை: புலியகுளத்தை சேர்ந்தவர் பிரணவ் மனைவி பூர்ணிமா, 20, இவர்களுக்கு 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதே ஆண்டு டிச., மாதம் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்து சில நாட்களில், உடல்நலக்குறைவால் குழந்தை உயிரிழந்தது. இந்நிலையில், தம்பதிக்கு மீண்டும் கடந்த அக்., மாதம், பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை வலிப்பு, இதயத்தில் அடைப்பு ஆகியவற்றால் சிரமப்பட்டது. குழந்தையை கடந்த, 4ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு குழந்தை இறந்தது. ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கத்தியை காட்டி பணம் பறிப்புகோவை: சரவணம்பட்டி, அம்மன் நகரை சேர்ந்தவர் பிரவீன் குமார். அதே பகுதியில் உள்ள பழக்கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம், சத்தி ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.500ஐ பறித்துக் கொண்டு தப்பினார். புகாரின்பேரில், வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீசார் பணம் பறிப்பில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த சூர்யபிரகாஷ், 23 என்பவரை பிடித்து சிறையில் அடைத்தனர்.

பஸ் பயணத்தில் செயின் பறிப்புகோவை: பெரியநாயக்கன்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் பூங்கொடி, 50. நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக போஸ்ட் ஆபீஸ் பஸ் ஸ்டாப்பில் இருந்து, லட்சுமி மில்ஸ் சந்திப்புக்கு பஸ்ஸில் சென்றார். பஸ்ஸை விட்டு இறங்கியதும், கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் செயின் மாயமானது தெரிந்தது. அவர் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இரு வேறு விபத்துகள்; இருவர் பலிகோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ஈஸ்வரன், 51. கடந்த 3ம் தேதி கோவை நரசிம்மபுரம் பாலக்காடு மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. படுகாயமடைந்த ஈஸ்வரன், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

* சரவணம்பட்டி, சத்தி ரோட்டில், நடந்து சென்று கொண்டிருந்த ஆந்திர மாநிலம், பாப்பும்பாரேவை சேர்ந்த ரேணுபாயங், 36 என்பவர் மீது சரக்கு வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலைப் பொருட்கள் விற்பனைகோவை: ரத்தினபுரி, துடியலுார், கரும்புக்கடை, சரவணம்பட்டி உள்ளிட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் சோதனை நடத்தினர். இதில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 172 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

கஞ்சா விற்பனை; ஒருவருக்கு சிறைகோவை: ஒப்பணக்கார வீதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடப்பதாக, கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட, கோவை பூமார்க்கெட்டை சேர்ந்த சூர்யகுமார், 32 என்பவரை சிறையில் அடைத்தனர்.

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்போத்தனூர்: மலுமிச்சம்பட்டி, அம்பாள் நகரை சேர்ந்தவர் ஏஞ்சல், 25. கடந்த பிப்., 16ம் தேதி இவருக்கும், மதுக்கரை மார்க்கெட், தண்டபாணி தோட்டத்தை சேர்ந்த கிருபாகரன், 29 என்பவருக்கும் திருமணம் நடந்தது. கிருபாகரன் வீட்டில் கூட்டாக வசித்து வந்தனர். கிருபாகரன் தகாத வார்த்தைகளை பேசி, ஏஞ்சலை தாக்கியுள்ளார். பெரியோர்களை வைத்து சமரசம் பேசி தனிக்குடித்தனம் சென்றனர். அங்கும் தாக்குதல் தொடர்ந்தது. ஏஞ்சலுடன் வாழ முடியாது என கூறி, கொலை மிரட்டல் விடுத்து, பிரபாகரன் தாக்கியுள்ளார். ஏஞ்சல் புகாரின் பேரில், பேரூர் சரக அனைத்து மகளிர் போலீசார், பிரபாகரன், அவரது தந்தை இருதயராஜ், தாய் விஜீலா மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

1.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்போத்தனுார்: குனியமுத்தூர் அருகே புட்டுவிக்கி சாலையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியே வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். தலா, 50 கிலோ எடை கொண்ட 36 மூட்டைகளில், 1.8 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. வாகனத்துடன் அரிசியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அரிசி, வாகனத்தின் உரிமையாளர் குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முஹமது ஹுசேன், 34 மற்றும் டிரைவர் திருச்சூர், வாடனபள்ளியை சேர்ந்த சிகாபுதீன், 41 ஆகியோர், கரும்புக்கடை, புல்லுக்காடு பகுதியில் வசிப்போரிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கேரள மாநிலம், கஞ்சிக்கோடை சேர்ந்த அப்துல்லா என்பவருக்கு, கூடுதல் விலைக்கு விற்பதும் தெரிந்தது.

இருவரும் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையிலடைக்கப்பட்டனர். அப்துல்லாவை தேடி வருகின்றனர்.

பணம் பறித்த மாணவர்கள் கைதுபோத்தனூர்: குனியமுத்தூர் அடுத்து பி.கே.புதூரிலுள்ள விடுதியில், சிவகங்கையை சேர்ந்த ஹரிபிரசாத், 19 என்பவர் தங்கி, தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது அறைக்கு, மற்றொரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் தனுஷ், 21 தனது நண்பர் ஒருவருடன் வந்து, பணம் கேட்டார்.

தர மறுத்த போது, அவரிடமிருந்து ஆயிரம் ரூபாயை பிடுங்கிக்கொண்டு, கத்தியால் தாக்கி அங்கிருந்து தப்பினர். ஹரிபிரசாத் புகாரின்பேரில், குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். தனுஷ் மற்றும் உடன் வந்த சேலம் தனியார் கல்லூரி மாணவர் அஜய் ஆகியோர் சிக்கினர். இருவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.

சமையல்காரரிடம் பணம் பறிப்புபோத்தனூர்: குனியமுத்தூர் அடுத்து சுண்டக்காமுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர், 43; சமையல்காரர். நேற்று முன்தினம், குளத்துபாளையம் போலீஸ் அவுட் - போஸ்ட் அருகே மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த ஒருவர் மது குடிக்க பணம் கேட்டு, கத்தியை காட்டி மிரட்டினார். தர மறுத்தபோது, அவரது பாக்கெட்டிலிருந்து, 500 ரூபாயை பறித்து சென்றார். ஸ்ரீதரின் புகாரின்பேரில், குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி குனியமுத்தூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்த முஜிபூர் ரஹ்மான், 32 என்பவரை கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement