Advertisement

நிலுவை குடிநீர் திட்ட பணி ஒப்பந்ததாரருடன் ஆய்வு



திருப்பூர் : மாநகராட்சி பகுதியில் குடிநீர் திட்ட குழாய் பதிப்பு பணிகளை விரைந்து முடிக்க பணி ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 'அம்ரூத்' திட்டத்தில் நான்காவது குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் இத்திட்டப் பணியில், பெரும்பாலான பணிகள் நிறைவுற்றுள்ளன.

சில இடங்களில் மேல்நிலைத் தொட்டி கட்டு மானம் நிறைவுறும் நிலையில் உள்ளது. சில பகுதிகளில், வினியோக குழாய்கள் பதிப்பு பணி, சில இடங்களில் வீட்டு இணைப்புகள் வழங்கும் பணி ஆகியன மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழாய் பதிப்பு பணிகள் முழுமையடையாத பகுதிகளில் புதிய ரோடு அமைக்கும் பணி, ரோடுகள் சீரமைப்பு செய்யும் பணி ஆகியன மேற்கொள்ளப்படாமல் அவதி நிலவுகிறது.

இதுபோன்ற புகார்கள் பொதுமக்கள் மத்தியிலும், சில கவுன்சிலர்கள் தரப்பிலிருந்தும் தொடர்ந்து எழுந்து வருகிறது.இது போன்ற புகார்கள் வரும் பகுதி, குழாய் பதிப்பு பணிகள் தாமதமாகும் பகுதிகளில், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேற்று ஆய்வு செய்தார்.அவ்வகையில், அங்கேரிபாளைம் ரோடு, மாதேஸ்வரன் நகர் ஆகிய பகுதிகளில் இப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

இப்பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்த நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பணிகள் தாமதம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement