Advertisement

கோவில் இடத்தில் கம்பி வேலி

ADVERTISEMENT


திருப்பூர் : திருப்பூர் அருகே கோவில் இடத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் சார்பில், கம்பி வேலி அமைக்கும் பணி நடக்கிறது.

திருப்பூர் அடுத்த இடுவாய் ஊராட்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பல்லடத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒன்பதரை ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் கடந்த சில மாதங்களாக ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வந்தது.

இதற்கு, ஊராட்சி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பு காரணமாக, குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. மீண்டும் அங்கு குப்பை கொட்ட முயற்சி நடப்பதாக மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இச்சூழலில், கோவில் இடத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியை சேர்ந்த மக்கள், பா.ஜ., தொண்டர்கள் உள்ளிட்டோர் கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையறிந்த ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொது செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்டோர் கோவில் இடத்தை பார்வையிட்டனர். மக்களின் பிரச்னை குறித்து கேட்டறிந்த பின், ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டினால், சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று மக்களிடம் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement