Advertisement

சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது



ஊட்டி : ஊட்டியில் தனியார் காட்டேஜில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி அருகே ஹில்பங்க் பகுதியில் தனியார் காட்டேஜில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஊட்டி ஜி 1 எஸ்.ஐ., ஷியாம், சிறப்பு பிரிவு எஸ்.ஐ., நாராயணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு, ஒரு அறையில் சிலர் பணம் கட்டி சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.

இதில், ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த, 12 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த, 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து கைது செய்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement