Advertisement

கண்துடைப்பாக நடந்த போதை பாக்கு சோதனை


அன்னுார் : 'உணவு பாதுகாப்பு துறை சோதனை கண்துடைப்பாக நடந்துள்ளது,' என புகார் எழுந்துள்ளது.

அன்னுார் வட்டாரத்தில், 21 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி, 204 கிராமங்கள் உள்ளன. ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். பல பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், ஹான்ஸ், பான்பராக் போன்ற போதை பாக்குகள் தங்கு தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் அன்னுார் தாலுகா உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சண்முகம் மற்றும் அன்னுார் போலீசார் குன்னத்தூர், மாணிக்கம் பாளையம் பகுதியில் 7 கடைகளில் சோதனை நடத்தினர். இதில் மைல் கல் பகுதியில் ஒரு பெட்டிக்கடை, குப்பேபாளையம் நால் ரோட்டில் ஒரு மளிகை கடை, மாணிக்கம் பாளையத்தில் ஒரு பெட்டிக்கடை என மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

அன்னுார் வட்டாரத்தில் பெரும்பாலான கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்குகள் விற்பனை நடக்கிறது. உணவு பாதுகாப்பு துறை அவற்றை பறிமுதல் செய்யாமல், அபராதம் விதிக்காமல் வெறும் கண்துடைப்பாக சோதனை நடத்தி மூன்று கடைகளுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

'எவ்வளவு புகையிலை பொருட்கள், போதை பாக்குகள் கைப்பற்றப்பட்டன. எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்கிற தகவலை தெரிவிக்காமல் உணவு பாதுகாப்பு துறையினர் பூசி மழுப்புகின்றனர்' என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement