Advertisement

அம்பேத்கருக்கு சிலை வைக்க வேண்டுகோள் 

ADVERTISEMENT


கோவை : அம்பேத்கரின், 67ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், வடகோவை மத்திய உணவுக்கழக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த இ.கம்யூ., மாநில பொருளாளர் ஆறுமுகம் பேசுகையில், ''அம்பேத்கருக்கு கோவை மாநகரில், பொது இடத்தில் சிலை இல்லை. எனவே, ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கரின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள், அன்று மத்திய உணவு கழக வளாகத்திற்கு வந்து அங்குள்ள சிலைக்கு, மாலை அணிவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, அம்பேத்கருக்கு கோவையில் நீதிமன்ற வளாகத்தில் அல்லது அதற்கு அருகில் சிலை அமைக்கப்பட வேண்டும்,'' என்றார்.

இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சிவசாமி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின், கோவை மாவட்ட செயலாளர் அசரப்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement