Advertisement

வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

பெ.நா.பாளையம், : துடியலூர் அருகே உள்ள அசோகபுரத்தில், 'வரும் முன் காப்போம்' பொது மருத்துவ சிறப்பு முகாம் நடந்தது.

முகாமை, ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். வட்டார மருத்துவ அலுவலர் சிவலிங்கம், மருத்துவர்கள் சிவகுமார், பிரபா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, ஆலோசனைகளையும், மருந்துகளையும் வழங்கினர். ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., சர்க்கரை பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

முகாமில், டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. வாசன் கண் மருத்துவமனை, கே.ஆர்.ஹெச்., சிவா மருத்துவமனைகளின் சார்பிலும், மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்தனர்.

கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் எக்ஸ்ரே யூனிட் வரவழைக்கப்பட்டு, 50 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனைகள் செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முகாமில், அசோகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் குமார், துணைத்தலைவர் சண்முகசுந்தரம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முகாம் ஏற்பாடுகளை, சுகாதார ஆய்வாளர்கள் ராமராஜ், பாலு உள்ளிட்டோர் செய்துஇருந்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement