Advertisement

யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிதி உதவி

ADVERTISEMENT


பந்தலுார், : பந்தலூர் அருகே நாடுகாணி பொன்னுார் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி,-50, என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

அவர் 'ரெப்கோ' வங்கியில் உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து, ரெப்கோ வங்கியின் பந்தலுார் கிளை சார்பில், அவரின் குடும்பத்தினருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. பேரவை பிரதிநிதி வக்கீல் கணேசன், தாயகம் திரும்பியோர் கூட்டமைப்பு நிர்வாகி ஞானப்பிரகாசம் மற்றும் புனிதகுமார்,மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று, நிதியுதவி வழங்கினர்.

கணேஷன் கூறுகையில், ''தாயகம் திரும்பியோர் அனைவரும் ரெப்கோ வங்கியில், உறுப்பினராக சேர வேண்டும். அப்போது தான், இதுபோன்ற உதவிகள். மட்டுமின்றி கல்வி, மருத்துவம், சுய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் உதவிகள் வழங்க ஏதுவாக அமையும்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement