Advertisement

மக்காச்சோளப் பயிரை தாக்கும் அடி சாம்பல் நோய் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை

ADVERTISEMENT


பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மக்காச்சோள பயிரை தாக்கும் அடி சாம்பல் நோயை மேலாண்மை செய்வது எப்படி என்பது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

மக்காச்சோள பயிரை அடி சாம்பல் நோய் தாக்கி விட்டால், இலையில் வெளிறிய கீற்றுகள் தோன்றுவது முக்கிய அறிகுறியாகும். செடியானது குட்டையாகவும், வளர்ச்சி குன்றியும், கணு இடைவெளி குறைந்தும் காணப்படும். வெண்மையான சாம்பல் பூச்சானது இலையின் அடியிலும், அதற்கு இணையான இலையின் மேற்பரப்பிலும் காணப்படும்.

முழுமையாக, விரியாத, பசுமையான ஆண் மலர்களின் உறையில் இப்பூச்சானது காணப்படும். ஆண் மலரில் சில நேரங்களில் சிறிய இலைகள் போன்ற பகுதி தோன்றும். தண்டின் பக்க மூட்டுகளில் இருந்து பக்கவாட்டு கிளைகள் தோன்றும்.

இந்நோய் அதிக காற்று ஈரப்பதம் மற்றும் தொடர் மழை, தூறல் காலங்களில் ஏற்படும். இளம் செடிகள் மிக அதிகமாக பாதிக்கப்படும். அடி சாம்பல் நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை, அறிகுறிகள் தெரிந்தவுடன் அழிக்க வேண்டும். சிறந்த நோய் எதிர்ப்பு ரகமான கோ.ஹெச்.6, மற்றும், 8, 11 ஆகியவற்றை விதைக்கலாம்.

மேலும், சூடோமோனாஸ் புளூரசன்ஸ் அல்லது ட்ரைகோ டெர்மா விரிடி ஒரு கிலோ, ஒரு ஏக்கருக்கு அதனுடன், 20 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து நடவு செய்த, 20 நாட்களுக்கு பின் வயலில் இடவேண்டும். மெட்டலாக்சில், 6 கிராம், ஒரு கிலோ விதையுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும் என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement