Advertisement

ரயில்வே ஸ்டேஷனில் துாய்மைப்பணி  தீவிரம்

ADVERTISEMENT

பொள்ளாச்சி : பொள்ளாாச்சி ரயில்வே ஸ்டேஷனில், புதிய ஒப்பந்த பணியாளர்களை நியமித்து, சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாலக்காடு கோட்டம், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் மார்க்கமாக, பொள்ளாச்சி - கோவை, - திருவனந்தபுரம் -- மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு -- சென்னை எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்துார், கோவை -- மதுரை இடையிலான ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அவ்வகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இந்த ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்குள்ள பிளாட்பாரம், தண்டவாளம் பகுதிகள் புதர் மண்டிக்கிடந்தது.

ஏற்கனவே, ஐந்து தற்காலிக துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு மாதம், 9,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டது.

கடந்த நான்கு மாதங்களாக முறையாக சம்பளம் வழங்காததால், துாய்மைப்பணி முடங்கியது. இது குறித்து, பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், 'ஆன்லைன்' வாயிலாக ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். தற்போது, புதிய ஒப்பந்த பணியாளர்களை நியமித்து, துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ரயில்வே ஸ்டேஷன் வளாகம், ரயில் தண்டவாளத்தில் குவிந்து கிடக்கும் குப்பை அகற்றப்பட்டும், புதர் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகள் அகற்றப்பட்டும் வருகின்றன.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement