Advertisement

தினமலர்- பட்டம் மெகா வினாடி- - வினா போட்டி அமெரிக்கா செல்ல மாணவ, மாணவியர் ஆர்வம்

ADVERTISEMENT


பெ.நா.பாளையம் : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நேற்று நடந்த, 'பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற மெகா வினாடி- -- வினா போட்டியில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, கேள்விகளுக்கான பதில்களை அளித்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான 'நாசா'வுக்கு நேரில் செல்லும் வாய்ப்பை வழங்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி- - வினா போட்டி, 2018 முதல் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி, இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த, 150 பள்ளிகளில் நடக்கிறது.

இப்போட்டிகளை, கோ-லோ நிறுவனம் மற்றும் சத்யா ஏஜன்சி இணைந்து வழங்குகிறது.

துடியலூர், வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்த தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 358 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

அதில் தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி - வினா போட்டி, மூன்று பிரிவுகளாக நடந்தது.

இதில், 'இ' அணியை சேர்ந்த மாணவியர், முறையே எட்டாம் வகுப்பு வருணிகா, ஆதிஸ்ரீ ஆகியோர் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் சாரதா, முதுகலை ஆசிரியர்கள் தினேஷ், அனிதா, கம்ப்யூட்டர் ஆசிரியை நித்யா ஆகியோர் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.

சுதந்திரா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி



அத்திப்பாளையத்தில் உள்ள சுதந்திரா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில், நேற்று நடந்த தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 50 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்வு செய்யப்பட்ட, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி- - வினா போட்டி, மூன்று பிரிவுகளாக நடந்தது.

இதில், 'இ' அணியை சேர்ந்த, ஐந்தாம் வகுப்பு மாணவி அக் ஷிதா, மூன்றாம் வகுப்பு மாணவர் ஜஸ்வந்த் ஆகியோர், அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

இவர்களுக்கு பள்ளி முதல்வர் கீதாமணி, ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை மணிமேகலை, தமிழ் ஆசிரியை உமா ஆகியோர் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.

சுதந்திரா மேல்நிலைப் பள்ளி, அத்திபாளையம்.



இப்பள்ளியில் நேற்று நடந்த, தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில்,100 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர்.

கால் இறுதி சுற்றுக்கான வினாடி- - வினா போட்டி, மூன்று பிரிவுகளாக நடந்தது. இதில், 'எப்' அணியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி அபிரூபா, 10ம் வகுப்பு மாணவி சவுதன்யா ஆகியோர் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, அரை இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சுகன்யா, ஆங்கில ஆசிரியர் பொன்மலர், அறிவியல் ஆசிரியர்கள் லட்சுமி, காளீஸ்வரி ஆகியோர் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி பாராட்டினர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement