Advertisement

கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த திட்டம்; வங்கி செயலர்கள் மாற்றம்! டூ 2.50 லட்சம் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம்

ஊட்டி : நீலகிரியில் உள்ள, 21 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் பல்வேறு காரணங்களால் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் தாலுகா பகுதிகளில், 77 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. 2.50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கிகள் மூலம், பயிர் கடன், நகை கடன், கறவை மாடு கடன், தாட்கோ கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த, நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உத்தரவின் பேரில், கூட்டுறவு சங்க அதிகாரிகள், கூட்டுறவு சங்க மேம்பாடு குறித்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

வாரம் ஒருமுறை இணை பதிவாளர், சரக துணை பதிவாளர்கள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு வங்கி செயலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

21 பேர் அதிரடி மாற்றம்



இந்நிலையில், சில வங்கிகளில், பயிர் கடன், நகை கடன்கள் வழங்குவதில் நிர்ணயித்த இலக்கை எட்டாத நிலை இருந்தது. இதற்கு காரணமான வங்கிகளின் மீது, உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இது தொடர்பாக வந்த புகார்களின் பேரில், பல்வேறு வங்கிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரே நாளில், 21 வங்கி செயலர்களை பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் உத்தரவிட்டார்.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சி நாதன் கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க மேம்பாடு குறித்து, பல்வேறு புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக வாரம் ஒரு முறை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்பட்டு வங்கி செயலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக, வங்கி உறுப்பினர்கள் மேம்பாடு; வங்கிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில்கொண்டு, 21 வங்கி செயலர்கள் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக மாற்றப் பட்டுள்ளனர்,'' என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement