Advertisement

மேயர் மீது தி.மு.க., கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க., மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி பெரும்பான்மையான அக்கட்சியின் கவுன்சிலர்களே மாநகராட்சி கமிஷனர் தாக்கரேவிடம் மனு அளித்தனர்.

சரவணன் மேயராகவும், துணைமேயராக ராஜுவும் உள்ளனர். இம்மாநகராட்சியில் ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செயல்படுத்தவில்லை.

அவற்றை செயல்படுத்துவதில் மேயர் பாரபட்சமாக நடக்கிறார் எனக் கூறி ஏற்கனவே உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு கவுன்சிலர்கள், மேயர், துணை மேயருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இனி மாநகராட்சி கூட்டத்தை முறையாக நடத்தவும் உத்தரவிட்டனர்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் மேயர், கவுன்சிலர்கள் மோதல் தொடர்கிறது. மாநகராட்சியின் புதிய கமிஷனராக தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

மாநகராட்சி படிகளில் அமர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கவுன்சிலர்கள் மூவரையும், ஒரு கட்சி பிரமுகரையும் கட்சியில் இருந்து நீக்கி தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் கடிதத்தை தி.மு.க.,வின் பெரும்பான்மை கவுன்சிலர்கள் நேற்று கமிஷனர் தாக்கரேவிடம் ஒப்படைத்தனர். இம்மாதம் நடக்கவுள்ள மாமன்ற கூட்டத்தை மேயருக்கு எதிராக புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இம்மாநகராட்சியில் ஆறு மாதங்களாக கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை.

அடிக்கடி புறக்கணிப்பு, மோதல் என தி.மு.க.,வினரே செயல்படுகின்றனர். மாநகராட்சியின் கவுன்சில் செயல்பாடுகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தடை விதித்து கமிஷனர் கட்டுப்பாட்டில் செயல்பட்டால் மட்டுமே அடிப்படை பணிகள் நடக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement