Advertisement

வெள்ள பாதிப்பு செய்திகள்



1. வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட, பள்ளிக்கரணை, சாய் பாலாஜி நகர், காமகோட்டி நகர் பகுதியில், தமிழக அரசு உரிய மீட்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அறிந்து, உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் களத்தில் இறங்கி, மீட்பு பணிகளில் ஈடுபட்டார் தென் சென்னை பா.ஜ., செயலர் மாலா.

2. மீட்பு களத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் எவரையும் பார்க்க முடியவில்லை. பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் பால் பாக்கெட், உணவு, தண்ணீர், பிஸ்கட் வழங்கியதை பார்க்க முடிந்தது.

3. வெள்ளம் வடியாமல், மீட்பு பணிகள் எதுவும் இல்லாமல், குடிநீர், மின்சாரம் இன்றி, வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பல அபார்ட்மென்ட் மக்கள், தங்கள் குடியிருப்பில் உள்ள ஜெனரேட்டர் வாயிலாக மின்சாரம் பெற்று, மொபைல் போனில் வெள்ளம் பற்றிய வீடியோக்களை எடுத்து, அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றினர் என்பதாலேயே, அப் பகுதிகளில் இன்டர்நெட் சேவையை அரசு முடக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

4. நேற்றும் ஆவின் பால் விநியோகம் முறையாக இல்லை. இதனால் பால் பாக்கெட்டுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

5. ரொட்டி, தண்ணீர் பாட்டில்களை நிவாரணமாக வழங்கிய தமிழக அரசின் ஊழியர்கள், பாதிக்கப்பட்டோரிடம் மரியாதை குறைவாக பேசியதை காண முடிந்தது.

6. பள்ளிக்கரணை பகுதியில்,. 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தார், வீட்டை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர்.

7. 'ஒன்றிணைவோம் வா' திட்டம்போல, தி.மு.க.,வினரை முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒன்றிணைக்காதது ஏன் என்ற கேள்வி பல இடங்களில் ஒலித்தது.

8. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் உள்ளே சென்று செய்தி சேகரிக்க விடாமல், பல பத்திரிகையாளர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். உண்மை நிலவரம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி போலீசாருக்கு வாய் மொழி உத்தரவு வந்துள்ளதோ என முனங்கியபடியே, பத்திரிகையாளர்கள் திரும்பிச் சென்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement