Advertisement

மயிலாப்பூர் பகுதியில் பாலுக்கு தட்டுப்பாட்டு கார்டு தாரர்களுக்கு மட்டும் வழங்கினர்



மயிலாப்பூர், யிலாப்பூர் பகுதியில் பொதுமக்கள் பால் கிடைக்காமல் திண்டாடினர். பால் பவுடரும் கிடைக்கவில்லை. கார்டு தாரர்களுக்கு மட்டும் பால்பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.



சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரு நாட்களாக பொதுமக்கள் பால் பாக்கெட்டுகளுக்கு திண்டாடி வருகின்றனர். நேற்று காலை ஆவின் பால் விநியோகம் செய்வதாக அறிந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்து கடைகளுக்கு படையெடுத்தனர்.



ஆனால் அங்கு பால் பாக்கெட்டுகள் இல்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தனர். மாடுகள் வளர்க்கும் இடத்திற்கும் சென்று, பொதுமக்கள் பாலுக்காக நின்றனர். ஆனால் அவர்களோ , தங்களிடம் தினசரி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் உள்ளது என கை விரித்தனர்.



பால் பவுடராவது வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என நினைத்து கடைகளுக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பால் பவுடர்களும் கிடைக்கவில்லை. நாகேஸ்வரா பூங்கா அருகில் உள்ள ஆவின் பூத்தில் மட்டும் கார்டுதாரர்களுக்கு பால் வினியோகம் செய்யப்பட்டது.



இந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலகத்தில் கேட்டபோது தகுந்த பதில் இல்லையாம். ஆத்திரமடைந்த மக்கள் நேற்று மாலை அதே பகுதி திருவள்ளூர் சிலை அருகே திடீரென மறியல் போராட்டம் நடத்தினர். ஆனால் அங்கு போலீசார் வரவில்லையாம், போராட்டம் நடத்திவிட்டு அவர்களே சோகமாக கலைந்து சென்று விட்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement