Advertisement

நான்கு நாட்களாக ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் தேங்கும் மழைநீர் 

ADVERTISEMENT
ஐயப்பன்தாங்கல்,போரூர் ஏரி நிரம்பி உள்ளதால், ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் நான்கு நாட்களாக தேங்கும் நீர் வடியாததால், பகுதிமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னைக்கு மிக அருகில், ஐயப்பன்தாங்கல் ஊராட்சி உள்ளது. மொத்தம், 15 வார்டுகள் கொண்ட அந்த ஊராட்சியில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

அங்கு, மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை வசதி இல்லாதததால், ஒவ்வொரு ஆண்டு மழைக்கும், ஐயப்பன்தாங்கல் ஊராட்சி முழுவதும் பாதிக்கப்படும்.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையில் ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் கடந்த நான்கு நாட்களாக தேங்கியுள்ளன.

இதனால், பொதுமக்கள் அத்யாவசிய பொருட்கள் கிடைக்காமல், பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் பால் மற்றும் நிவாரண பொருட்களை, அரசியல் வாதிகள் எடுத்து செல்வதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை என, பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஐயப்பன்தாங்ல ஊராட்சியில் தேங்கும் மழை நீர், போரூர் ஏரியில் வெளியேற வேண்டும். இந்நிலையில் போரூர் ஏரி நிரம்பி உள்ளதால் தேங்கிய நீர் வடியாமல், கொளத்துவாஞ்சேரி, விஜயலட்சுமி நகர், சிவராமகிருஷ்ண நகர், மருதம் நகர், தனலட்சுமி நகர், ஈ.வி.பி., பிரபு அவென்யூ, பாலாஜி நகர், உள்ளிட்ட நகர்களில் மழை நீர் தேங்கியுள்ளன.

இதையடுத்து, தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் நேற்று பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போரூர் ஏரி :

சென்னைக்கு மிக அருகாமையில், மாநகராட்சி எல்லையில் போரூர் ஏரி உள்ளது. 2015 ம் ஆண்டு, போரூர் ஏரியை துார்வாரி, 46 மில்லியன் கன அடி கொள்ளளவில் இருந்து, 70 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டது.

மிக்ஜாம் புயல் தாக்கத்தால் பெய்த மழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் போரூர் ஏரி நிரம்பி உள்ளது. இதில், மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே போரூர் ஏரி நிரம்பி சாலையில் வழியும் நிலையில் உள்ளது.

மேலும், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் போரூர் ஏரி அருகே மழை நீர் தேங்கியுள்ளது. இதில், முகலிவாக்கம் ஊராட்சி அருகே மழைநீர் புகுந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், போரூர் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விட முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில், ‛ செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால், மவுலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போரூர் ஏரி நீர் திறந்து விட்டால், அங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், போரூர் உபரி நீர் திறக்கப்படாமல் உள்ளது, ' என்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement