Advertisement

வேறு நபருடன் பழகிய அக்கா கொலை செய்த தம்பி கைது

ராஜவல்லிபுரம்:தாழையூத்து அருகே ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ஆசீர்பாண்டி ராஜ் மகள் தங்கத்தாய், 20. பிளஸ் 2 படித்த இவர், கங்கைகொண்டான் 'சிப்காட்' பகுதி தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தங்கத்தாய்க்கும், அவரது தம்பி முத்து, 18, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முத்து, அரிவாளால் தங்கத்தாயை வெட்டிக் கொலை செய்தார். தாழையூத்து போலீசார் முத்துவை கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

வேலை பார்க்கும் இடத்தில் ஒருவரிடம் நட்புடன் தங்கத்தாய் பழகினார். தங்கத்தாய்க்கு திருமணம் செய்ய, குடும்பத்தினர் பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தனர். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், அக்காவை முத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இவ்வாறு கூறினர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement