Advertisement

கால பைரவாஷ்டமி கோலாகலம்

கோபி: கோபி பச்சமலை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள, கால பைரவர் சன்னதியில், பைரவாஷ்டமி விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. மதியம், 3:00 மணி முதல், அஷ்ட பைரவர் மகா ேஹாமம் நடந்தது. அதையடுத்து பச்சரிசி மாவு, நெல்லிப்பொடி, திருமஞ்சனம், பசும்பால், கரும்பு சர்க்கரை, தேன், கரும்புச்சாறு, பழங்கள், இளநீர், குல்கந்து, மாதுளை, உள்ளிட்ட பொருட்களால், கால பைரவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின், 108 சங்ககாபிஷேகம், பரிகார அர்ச்சனை நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* கால பைரவாஷ்டமியை ஒட்டி, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், நேற்றிரவு மகா யாகம் நடந்தது. இதில், 64 பைரவர்கள், 64 யோகி தெய்வங்களுக்கு பலி பூஜைகள் செய்தனர். இதையடுத்து கால பைரவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதேபோல் பிடாரியூர் திருமுகம் மலர்ந்த நாதர் கோவில், முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் கோவிலில் பைரவாஷ்டமி பூஜை நடந்தது. சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலும், மாலையில் பைரவாஷ்டமி யாக பூஜை நடந்தது.

* அந்தியூர் அருகே சின்னபருவாச்சியில் பிரசித்தி பெற்ற காலபைரவர் கோவிலில், மிளகாய் யாகம் நடத்தது. இதை தொடர்ந்து கலச பூஜை, உற்சவர் பைரவரை கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர். அந்தியூர் மட்டுமின்றி கோவை, சேலம், திருப்பூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement