Advertisement

ஜெ., 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: சென்னிமலையில் பன்னீர் தரப்பால் சலசலப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை, ஈரோடு மாவட்டம், மாநகரில் அ.தி.மு.க.,வினர் நேற்று அனுசரித்தனர்.
புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன்புறம், அலங்கரித்து வைக்கப்பட்ட, ஜெயலலிதா உருவப்படத்துக்கு, பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி தலைமைமையில், தொண்டர்கள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர செயலாளர் மூர்த்தி, நகர பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பவானிசாகர் ஒன்றிய கிராம பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

* கோபி புதுப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், ஜெயலலிதா உருவப்படத்துக்கு, எம்.எல்.ஏ., செங்கோட்டையன், நகர செயலாளர் முத்துரமணன், முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
* அந்தியூர், தவிட்டுப்பாளையம் மார்க்கெட்டில், ஜெ., போட்டோவுக்கு, நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள ஜெ., சிலைக்கு மாலை, மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தினர். மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., செல்வகுமார சின்னையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* பவானியில், அந்தியூர் பிரிவில், பவானி நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில், ஜெ., உருவப்படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நகர அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் அந்தியூர் பிரிவில், முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில், ஜெ., போட்டோவுக்கு கட்சியினர் மரியாதை செலுத்தினர். பவானி தொகுதியின் பல்வேறு இடங்களில், ஜெ., நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
சென்னிமலையில் தகராறு
சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன், பன்னீர் செல்வம் அணி தரப்பில், ஜெ., போட்டோ மற்றும் அ.தி.மு.க., கட்சிக்கொடியை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைப்பார்த்த அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், தகராறு செய்து கொடியை அகற்ற வைத்தனர். அதேசமயம் கட்சி கொடியுடன் அஞ்சலி செலுத்திய படங்களை, சமூக வலைதளத்தில் பன்னீர் செல்வம் அணியினர் வெளியிட்டனர்.
இதுகுறித்து அ.தி.மு.க., சென்னிமலை ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் ரமேஷ் தலைமையிலான நிர்வாகிகள், சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில், பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் மேகநாதன், ரகுபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு தந்தனர்.
அவர்களை ஸ்டேஷனுக்கு வரவழைத்த இன்ஸ்பெக்டர் சரவணன், இனிமேல் கட்சிக்கொடி பயன்படுத்த மாட்டோம் என எழுதி வாங்கி அனுப்பினார். இதனால் போலீஸ் ஸ்டேஷனில் காலை முதல் மதியம் வரை பரபரப்பு நீடித்தது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement