Advertisement

நிரந்தர சார்பதிவாளர் இல்லை; ஊழியர் பற்றாக்குறை: காங்கேயத்தில் பத்திர பதிவில் தாமதம்; மக்கள் அவதி

காங்கேயம்: நிரந்தர சார்பதிவாளர் நியமனம் செய்யாதது, ஊழியர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், காங்கேயம் பத்திர பதிவு அலுவலகத்தில், பணிகள் முடங்கி, மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
காங்கேயம் சார்பதிவாளர் அலுவலகம், தாலுாகா அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களின் சொத்து பரிமாற்றங்கள் செய்யப்படுகிறது.

அலுவலகத்தில் சார்பதிவாளர், இரண்டு ஹெட் கிளார்க், இரண்டு ஜூனியர் அஸிஸ்டெண்ட், இரண்டு அலுவலக உதவியாளர்கள், வாட்ச்மேன் என எட்டு பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், இரண்டு பேர் மட்டுமே தற்போது உள்ளனர். அதுவும் டெபுடேசனில் பொறுப்பு அலுவலர்களாக சார்பதிவாளர் மற்றும் அசிஸ்டெண்ட் பணிபுரிகின்றனர். சார்பதிவாளராக டெபுடேஷனில் சதீஷ் (2.11.23 முதல் 22.11.23), கோமதி (23.11.௨3 முதல் 24.11.23) வரையிலும் பணிபுரிந்தனர். தற்போது சார்பதிவளராக சிவக்குமார் உள்ளார். இவரும் நிரந்தரமின்றி, டெபுடேசனில் உள்ளார்.
அலுவலகத்தில் தினமும், 50 பத்திரங்களும், முகூர்த்த நாட்களில், 100க்கு மேலும் பதிவு செய்யப்படும். ஆட்கள் பற்றாக்குறையால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு உடனுக்குடன் பத்திரம் கிடைக்காமல் தாமதமாகிறது. பத்திரங்கள் திரும்ப பெறுவதில் தாமதம், பத்திர நகல், வில்லங்கச்சான்று பெற தாமதம் என, அனைத்து பணிக்கும் பல மணிநேரம் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு துறையில் அரசுக்கு வருமானம் கொட்டுகிறது. ஆனால், காங்கேயத்திலோ போதிய அலுவலர்களை நியமிக்காமல், மக்களை அல்லாட வைக்கும் நிலை உள்ளது. நிரந்தர சார்பதிவாளர், ஊழியர்களை நியமிக்க, மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement