Advertisement

பருவமழையால் பயிர்களுக்கு பாதுகாப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பருவமழையால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, சேதங்களை தடுக்க, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் மரகதமணி, யோசனை தெரிவித்துள்ளார்.
பருவ மழை காலத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டங்களில் மரத்தின் சுமையை குறைக்க, கவாத்து செய்து, காற்றின் சேதத்தை தடுக்கலாம். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து, மரம் மற்றும் செடிகளை, சாயாமல் தவிர்க்கலாம். மரத்தை சுற்றி மண் அணைக்கலாம்.

உபரி நீர் வடிந்த பின் விதைப்பு, நடவு பணி மேற்கொள்ளலாம். வடிகால் வசதியற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்து, நீர் தேக்கத்தை தவிர்க்கலாம். மழை நீர் வடிந்த பின், பயிருக்க ஏற்ற மேலுரம் இட்டு, மண் அமைக்க வேண்டும். இலை வழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை சரி செய்யலாம். பசுமை குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன், இணைப்பு கம்பி இணைப்பை உறுதி செய்ய வேண்டும். பசுமை குடிலின் உட்புறம் காற்று புகாதவாறு அடைக்க வேண்டும். காற்றால் ஏற்படும் சேதத்தை தடுக்க, பசுமை குடிலை சுற்றி உயிர் வேலை அமைக்கலாம். கிழிந்துபோன நிழல் வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும்.
பல்லாண்டு பயிர்களான மா, கொய்யா, மாதுளை மரங்களில் காய்ந்த, பட்டுப்போன கிளைகளை அகற்றலாம். நல்ல காற்றோட்டம் அமையும்படி கிளைகளை கவாத்து செய்யுங்கள்.
மிளகு கொடிகளில், கொடிகளை சரியாக கட்டி விட வேண்டும். கொக்கோ மரத்தில் காய்ந்து போன இலைகள், பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். அதிகப்படியான இலை தலைகளை கவாத்து செய்ய வேண்டும். முதிர்ந்த பழங்களை அறுவடை செய்யலாம்.
வருட பயிர்களான வாழை மரங்கள் காற்றால் பாதிக்காதபடி, கீழ் மட்ட இலைகளை அகற்றி, மரத்தின் அடியில் மண் அமைக்கலாம். சவுக்கு, யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றி கோலாக வைக்கலாம். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி செய்யலாம். வாழைத்தாள்களை முறையாக மூடி வைக்கலாம். முதிர்ந்த தார்களை அறுவடை செய்யலாம்.
தக்காளி செடிக்கு ஊன்று கோல் பயன்படுத்த வேண்டும். நோய் தடுப்பு மருந்துகளை தெளிக்கலாம். பந்தல் காய்கறி செடிகளில் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement