Advertisement

ராமதாசின் பகல் கனவு பலிக்குமா?

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT


என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில், 120 சட்டசபை தொகுதிகளில் பா.ம.க., வலுவாக உள்ளது' என்கிறார், பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். மேலும், அங்கு ஓட்டுச்சாவடி களப் பணியாளர்களை உடனே நியமித்து, தொண்டர்கள் ஒவ்வொருவரும், 20 குடும்பங்களை எடுத்துக் கொண்டு, 100 ஓட்டுகளை பெற்றுத் தரவேண்டும். 'பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டும்...

'இதை செய்தாலே போதும், தமிழகத்தில் அடுத்து பா.ம.க., நிச்சயம் ஆட்சிக்கு வந்து விடும்' என்று, சிரிக்காமல் சீரியசாக பேசியுள்ளார். தமிழகத்தில் அரியலுார் தாண்டி, பா.ம.க.,வுக்கு செல்வாக்கு இருக்கிறதா என்பது சந்தேகம் தான். இந்த லட்சணத்தில், 'தமிழகத்தில், 120 தொகுதிகளில் பா.ம.க., அமோக வெற்றி பெறும்' என்று எப்படி சொல்கிறார்?

'நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும்' என்ற பழமொழிக்கேற்ப தற்போதுள்ள சூழலில், பா.ம.க.,வை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள, தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சிகள் தயாராக இல்லை.

தி.மு.க., கூட்டணி வலுவாக இருக்கும் போது, அதை மீறி, சட்டசபை தேர்தலில், பா.ம.க., அமோக வெற்றி பெற வாய்ப்பே இல்லை. இப்படி சீண்டுவார் இல்லாத நிலையில், தன் கட்சியை வைத்திருக்கும் இவர், '120 தொகுதிகளில் பா.ம.க., நிச்சயம் வெற்றி பெறும்' என்று சொல்வதை, அவரது கட்சியினரே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பா.ம.க., தமிழகத்தில், 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டாலும், அத்தனை தொகுதிகளிலும், படுதோல்வி அடைந்து, டிபாசிட்டை பறிகொடுப்பது உறுதி. தன் மகன் அன்புமணியை, தமிழக முதல்வராக்கி பார்க்க நினைக்கும் மருத்துவர் ராமதாசின் கனவு, பகல் கனவாகவே முடியும் என்பதில் சந்தேகமில்லை.வாசகர் கருத்து (26)

 • Jai -

  காசுக்கு ஓட்டு என்று வந்த பிறகு, நல்லதோ கெட்டதோ ஆனால் சிறு கட்சிகள் தமிழ் நாட்டில் அழிந்து வருகின்றன. இரண்டு கட்சிகள் மட்டுமே தேர்தலை நேரடியாக எதிர் கொள்ளும் நிலையில் உள்ளன. இரண்டு பெரிய இந்த சிறு கட்சிகளை ஊறுகாயாக தொட்டு கொள்ள மட்டும் பயன்படுத்துகின்றனர்

 • Sathyam - mysore,இந்தியா

  PMK இப்போது மூழ்கும் படகு முடிந்து தூசி படிந்துவிட்டது, கிட்டத்தட்ட துருப்பிடித்துவிட்டது, எதற்கும் நல்லது இந்த ஒற்றை மாவட்ட அப்பா மகன் கட்சி தமிழகத்திற்கு சாபக்கேடு, நல்லதே இல்லை. அவை முற்றிலும் சாதி அடிப்படையிலான, சமூகத்தை பிளவுபடுத்துவது, திமுக போலவே. எந்த இந்து விரோத துஷ்பிரயோகங்களையும் இந்த துரோகிகள் ஆதரிக்க மாட்டார்கள் திமுக/அவர்களின் கூட்டாளிகள், மற்ற தனிப்பட்ட கிறிஸ்தவ போதகர்கள் அல்லது இந்த துரோகிகள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை மதமாற்றத்திற்கு எதிராக அவர்களின் முந்தைய கட்சி உறுப்பினர் ராமலிங்கம் கொடூரமாக கொல்லப்பட்டார் பிஜேபி இந்த 3ம் தர கட்சியை முற்றிலுமாக புறக்கணித்து இந்த சுயநலத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்

 • Sathya -

  If he stands alone, which he will not, winning a single seat will be a difficult one. Good day, dreamer, and not a good politician or human. His son, another wasted resource

 • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

  தன் கட்சி காலி பெருங்காய டப்பாக்கிறது இவருக்கும் நல்லாவே தெரியும. இருந்தாலும் கொஞ்சம் சவுண்டு விட்டு ஒரு நாலஞ்சி பெட்டியை தேத்தலாமான்னு ட்ரை பண்றாரு.

 • GANESUN - Chennai,இந்தியா

  கனவு காண யாருக்கும் உரிமை உண்டு...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement