Advertisement

நீரில் மூழ்கிய வாகனங்கள் இழப்பீடு கிடைக்குமா?



சென்னை : மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்போர் விபத்து, தீ, திருட்டு, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால், வாகனங்களுக்கு சேதம் ஏற்படும் போது, இழப்பீடு பெறுவதற்காக, பொதுத்துறை மற்றும் தனியார் பொது காப்பீட்டு நிறுவனங்களில், காப்பீடு செய்துள்ளனர். இதற்காக, ஆண்டுதோறும் வாகன மதிப்பிற்கு ஏற்ப, 'பிரிமீயம்' தொகை செலுத்தி வருகின்றனர்.

'மிக்ஜாம்' புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கன மழையால், சாலைகளில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில், வீடுகளில் தரைதளம் மற்றும் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கார்கள், இலகு ரக வர்த்தக வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.

இதனால், பல வாகனங்கள் பழுதாகியுள்ளதால், வாகன உரிமையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:



வழக்கமாக, இழப்பீட்டு தொகை கோரி விண்ணப்பித்தால், அதை வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் தாமதம் செய்யும். தற்போது, மழையால் நான்கு மாவட்டங்களிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

எனவே, எளிதில் இழப்பீட்டு தொகையை பெற, காப்பீட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அந்நிறுவனங்களை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து (10)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    அரசு மற்றும் தனியார் வாகனக் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு செய்து கொண்ட மக்களுக்கு நெற்றி நல்ல அகலமா இருக்கு ,அப்புறம் என்ன காப்பீட்டு நிறுவனங்கள் நல்லா சாத்துவாங்க....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியாவில் எல்லாக் காப்பீட்டு நிறுவனங்களும் நிச்சயம் திவால் ஆகும் ,கையை அகலமாக விரித்துவிடும் ,மக்களுக்கு கடைசியில் ஒன்றும் கிடைக்கப்பபோவதில்லை,மக்களுக்கு நஷ்டம் தான் ,கஷ்டம் தான்

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Insurance Companies will definitely be under Bankruptcy.....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவக்காப்பீடு உட்பட மக்களை நன்கு ஏமாற்றுகின்றன.மக்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை நன்கு ஏமாறுகின்றனர்.... . .

  • சண்முகம் -

    Force Majeure அல்லது Act of God என்று இயற்கையின் சீற்றத்திற்கு பல காப்பீடுகள் இழப்பு வழங்காது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement