Advertisement

கோவையிலிருந்து சென்னைக்கு பறந்த 41 எச்.பி., ராட்சத நீர் இறைப்பு மோட்டார்

ADVERTISEMENT

சென்னை தெருக்களை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற, கோவையில் இருந்து 41 எச்.பி., திறன் கொண்ட மோட்டார்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

மோட்டார் பம்ப் செட்களின் உற்பத்தி கேந்திரமான கோவையில் இருந்து ராட்சத மோட்டார்கள், மாநகராட்சி சார்பில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தனியார் நிறுவனங்களிடம் இருந்து முதற்கட்ட மாக நேற்று, 41 எச்.பி., திறன் கொண்ட ஆறு ராட்சத மோட்டார்கள், 10 சிறு மோட்டார்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், கூடுதல் மோட்டார்கள் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த ராட்சத மோட்டார்கள், 32 கிலோ வாட் திறனுடன் வேகமாக தண்ணீரை வெளியேற்றும் திறன் உடையவை. இந்த ஆறு மோட்டார்கள், ஏற்றுமதிக்காக தயாராக இருந்த நிலையில், மாநகராட்சி கமிஷனரின் நடவடிக்கையால், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதேபோல, கன மழையால் சிக்கி தவிக்கும் சென்னை மக்களுக்கு உதவும் வகையில், என்.எல்.சி.,யில் இருந்து மிதக்கும் ராட்சத மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த மோட்டார்கள், ஒரு நிமிடத்தில், 1 லட்சம் லிட்டர் மழை நீரை வெளியேற்றும் திறன் கொண்டவை. மேலும், இத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விரைந்தார் கமிஷனர்!

கோவை மாநக ராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை கமிஷனராக இரண்டு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்தார். மழைநீர் வடிகால், வெள்ளத் தடுப்பு பணிகளில் இவருக்கு அனுபவம் உள்ளதால், மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் விதமாக, நேற்று மதியம் சென்னை விரைந்தார்.





- நமது நிருபர் -



வாசகர் கருத்து (19)

  • Ganapathy Subramanian - Muscat,ஓமன்

    ஞாயிறு மற்றும் திங்கள் கனமழை பெய்யும் என்று எல்லா ஊடகங்களும் சொல்லிய பிறகும் புதனன்று நடவடிக்கை எடுக்கும் விடியா அரசு வாழ்க. இதற்கும் காரணம் முந்தைய அரசுதான் என்று அவர்கள் கூறுவதை கேள்வியே கேட்காமல் அப்படியே மக்களுக்கு செய்தியாக சொல்லும் சுய அறிவில்லா ஊடகங்களும் வாழ்க. இரண்டாயிரம் வந்தால் போதும், திறனற்ற ஊழல் மிகுந்த அரசாக இருந்தாலும் ஓட்டு போடும் சுயநல வாக்காளர்களும் வாழ்க.

  • AMSA - chennai,இந்தியா

    அதெல்லாம் எந்த மிசினும் வராது .. சும்மா பேப்பர் விளம்பரத்திற்காக கொடுப்பது இந்த நியூஸ் எல்லாம்

  • GANESUN - Chennai,இந்தியா

    "மும்பையில் high tide காலத்தில் மட்டுமே மழை நீர் தேங்கும் சாலையில் வெள்ளம் பெருகும் மற்றபடி தேங்குவதி..." ஹாஹா.. நாங்க தமில் ட்ரிவிடியண்டா .. நூறு வருஷம் ஆட்சி செஞ்சாலும் இப்படித்தான் தமிழ்நாட்டை வெச்சிப்போம்..

  • GANESUN - Chennai,இந்தியா

    ஆமா, ஆனா 5,060 கோடில அடக்கம்...

  • g.s,rajan - chennai ,இந்தியா

    குறிப்பாக இந்த வேளச்சேரி மற்றும் பெருங்குடி பகுதியில் தண்ணீர் பெருமளவு தேங்கி,வீடுகளுக்குள் மழை நீரும் ,கழிவு நீரும் கலந்து உள்ளே புகுந்து மக்களை கடும் சிரமத்தில் ஆழ்த்தி உள்ளது,அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்குமா...???தெரியவில்லை ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement