Advertisement

முதல்வர் ஆவாரா வசுந்தரா ராஜே? ராஜஸ்தான் பா.ஜ.,வில் பரபரப்பு

ADVERTISEMENT


ஜெய்ப்பூர்,ராஜஸ்தானில் வெற்றி பெற்ற பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவை அவரது இல்லத்தில் சந்தித்து வரும் நிலையில், ''அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து சட்டசபை குழு எடுக்கும் முடிவு அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும்,'' என, ராஜஸ்தான் பா.ஜ., பொறுப்பாளர் அருண் சிங் நேற்று தெரிவித்தார்.

வாய்ப்புராஜஸ்தான் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த முறை முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலேயே பா.ஜ., தேர்தலை சந்தித்தது. அதனால், முதல்வர் நாற்காலிக்கான போட்டி தீவிரம் அடைந்துள்ளது.

ராஜஸ்தான் முதல்வராக 2003 - 08 மற்றும் 2013 - 18ல் பா.ஜ., மூத்த தலைவர் வசுந்தரா ராஜே இருமுறை பதவி வகித்துள்ளார். அதனால், இந்த முறையும் அவர் முதல்வராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது வசுந்தராவை கட்சி தலைமை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்ற பேச்சும் உள்ளது.

இந்நிலையில், பா.ஜ.,வின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உடன், 50க்கும் மேற்பட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வசுந்தரா ராஜேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

முதல்வர் பதவிக்கு வசுந்தராவே சரியான தலைவர் என்பதை அவர்கள் சூசகமாக தெரிவிக்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் பா.ஜ., பொறுப்பாளர் அருண் சிங், மாநில தலைவர் சி.பி.ஜோஷி ஆகியோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை புதுடில்லியில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர்.

அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு, ''சட்டசபை குழு கூடி எடுக்கும் முடிவு அனைவருக்கு் ஏற்புடையதாக இருக்கும்,'' என, ராஜஸ்தான் பா.ஜ., பொறுப்பாளர் அருண் சிங் நேற்று தெரிவித்தார்.

ம.பி., முதல்வர் யார்?மத்திய பிரதேச சட்ட சபை தேர்தலில் பா.ஜ., 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தல் பிரசாரத்தில் அந்த கட்சிக்கான முதல்வர் வேட்பாளரை பா.ஜ., அறிவிக்கவில்லை.

எனினும், ம.பி.,யில் செல்வாக்கான அரசியல் தலைவரான, தற்போதைய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. 22 ஆண்டுகளுக்கு மேல், அவர் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

ஆனாலும், மத்திய அமைச்சர்கள் பிரகலாத் சிங் படேல், ஜோதிராதித்ய சிந்தியா, நரேந்திர சிங் தோமர் மற்றும் கைலாஷ் விஜய் வர்கியா, வி.டி.சர்மா ஆகியோரும், முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.வாசகர் கருத்து (13)

 • abdulrahim - dammam ,சவுதி அரேபியா

  ஜெயிக்கவே முடியாதுன்னு தெரிஞ்ச தெலங்கானாவுல போயி பிற்படுத்தப்பட்டவரை முதல்வர் ஆக்குவோம் னு பேசின மோடி இங்கே தங்கள் ஜெயித்த ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவாரா.

  • Rajasekar Jayaraman - ,

   அதை கொத்தடிமைகள் பேசக்கூடாது.

 • Indian - Vellore,இந்தியா

  அங்கும் இனி கோஷ்டி பூசல் ஆரம்பம் ஆகும் இவன் காலை அவன் வார காத்துக்கொண்டு இருப்பான்.

 • இளந்திரயன், வேலந்தாவளம் -

  திருமதி வசுந்தராவோ இல்லை திரு சிந்தியாவோ.. இருவரும் ஒரே ராஜ குடும்பத்தை சார்ந்தவர்கள்... இவர்களில் சிந்தியா இளைஞர்... வசுந்தரா பெரியளவில் active இல்லை.. so திரு சிந்தியா வருவதே நலம்

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  நாடாளுமன்ற தேர்தல் வரை வசுந்தரா முதல்வராக இருப்பதே நல்லது , பின் வசுந்தரா இருப்பது கட்சி இருக்கு நல்லதல்ல

 • veeramani - karaikudi,இந்தியா

  மாதே சிந்தியா..பா ஜா க வின் நிறுவன தலைவர்களில் முக்கியமானவர். வாஜிபை, அத்வானி போன்ற தலைவர்களோடு நெருங்கி பழகியவர் ராணி சிந்தியா. வடமாநிலங்களில் கட்சியின் செல்வாக்கு உயர கரம் இவர். வசுப்பிடுறா சிந்தியா தான் ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement