Advertisement

சென்னைக்கு ராட்சத மோட்டார்கள்; என்.எல்.சி., அனுப்பி வைப்பு

ADVERTISEMENT


நெய்வேலி : கன மழையால் சிக்கி தவிக்கும் சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், என்.எல்.சி., யில் இருந்து மிதக்கும் ராட்சத மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னை முழுவதும் மழை நீர் வடியாமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடலுார் கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் எஸ்.பி., ராஜாராம் ஆகியோர்களை தொடர்பு கொண்ட என்.எல்.சி.,சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, என்.எல்.சி., சுரங்கங்களில் தேங்கும் சுரங்க நீரை வெளியேற்ற பயன்படுத்தப்படும் மிதக்கும் ராட்சத மோட்டார்களை வழங்குவதாக தெரிவித்தார்.

அதையடுத்து, கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோர் நெய்வேலியில் முகாமிட்டு, மிதக்கும் ராட்சத மோட்டார்களை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மோட்டார்கள் தேங்கியிருக்கும் மழை நீரின் மேல் மிதந்து கொண்டே, தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விடும்.

ஒரு நிமிடத்தில் ஒரு லட்சம் லிட்டர் மழை நீரை வெளியேற்றும் திறன் கொண்ட மிதக்கும் ராட்சத மோட்டார்கள் நெய்வேலியில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



வாசகர் கருத்து (4)

  • Thetamilan - CHennai,இந்தியா

    யானை பசிக்கு சோளப்பொரியா?. இஸ்ரோவிலிருந்து ராட்சத ராக்கெட்டுகள் வேண்டும் .

    • சாமிநாதன்,மன்னார்குடி - ,

      அறிவு பிரமிக்க வைக்கிறது!

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை அரசியலுக்கு பயன்படுத்தும் திருட்டு திராவிட கட்சி இனியாவது தன்னை திருத்தி கொள்ள வேண்டும் ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement