Advertisement

ஒரு நாள் இறைவனிடம் துவங்கி இறைவனிடம் முடிய வேண்டும்

ADVERTISEMENT
கோவை;கோவை ராம்நகரில் உள்ள கோதண்டராமர் கோவிலில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ஆச்சார்யா ரங்காஜியின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நம் வாழ்க்கை, பகவானோடு சம்பந்தப்படவில்லை என்றால், அந்த வாழ்க்கையை வாழ்ந்தும் பயனில்லை. இறைவனோடு இணைந்து வாழும் வாழ்க்கைதான் மகிழ்ச்சியானது. பகவானின் அனுக்ரஹகத்தை பெற்று, தர்மம் தவறாமல் வாழும் வாழ்க்கைதான் அர்த்தமுடையது.

நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய, பொய் பேசமல் இருப்பது, பிறரை இம்சை செய்யாமல் இருப்பது, பிறர் பொருள் மேல் ஆசைப்படாமல் இருப்பது, புலன்களை கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதிகம் பொருள் சேர்த்து நிம்மதி இல்லாமல் வாழ்வதை தவிர்க்க வேண்டும்.

துாய்மையாகவும், சந்தோஷமாகவும் வாழ வேண்டும். ஒரு காரியத்தை நிறைவேற்ற சபதம் செய்ய வேண்டும். ஒரு குருவிடம் சரணடைய வேண்டும். ஒரு நாளை, இறைவனிடத்தில் துவங்கி இறைவனிடத்தில் முடிக்க வேண்டும். இந்த விஷயங்களை, ஒரு மனிதன் தவறாமல் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாகும்.

இவ்வாறு, அவர் பேசினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement