Advertisement

வாழ்க்கையையே வழிபாடாக கொண்டது ஹிந்து மதம்

ADVERTISEMENT
பல்லடம்;வாழ்க்கையையே வழிபாடாக கொண்டது ஹிந்து மதம் என, பல்லடம் அருகே நடந்த தேய்பிறை அஷ்டமி விழாவில் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பல்லடம் அருகே மலையம்பாளையம் வடுகநாதசுவாமி கோவிலில், கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தது. செஞ்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளார் தலைமை வகித்து அருளாசி வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஆன்மிப் பேச்சாளர் வாவிபாளையம் அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:

தலைவிரி கோலமாக பெண்கள் வெளியே செல்வது தவறான, அமங்கல மான அறிகுறியாகும். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் மணப்பெண்களும் தலைவிரி கோலமாக இருப்பது, மேலும் வருத்தத்தை தருகிறது. தயவு செய்து திருநீற்றை நெற்றி நிறைய பூசுங்கள். இறைவன் அள்ளி கொடுப்பார்.

அப்படி திருநீறு பூசும்போது, இந்த ெஜன்மத்தின் அனைத்து இன்னல்களும் நீங்கிவிடும். கரு உருவாகும்போதே, இந்த உடம்புடன் உயிரை இணைத்தான் இறைவன். ஓசை, ஒலி வடிவில் இறைவன் இருப்பதால்தான் கோவில்களில் மணி அடிப்பதும் தீபாராதனை காட்டுவதும் நடக்கிறது.

வாழ்க்கையையே வழிபாடாகக் கொண்டது ஹிந்து மதம். இப்படிப்பட்ட ஹிந்து மதத்தில் நாம் இருப்பதற்கு எத்தனையோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். பொய்யான உடம்புக்கு மெய் என்று பெயர். நல்ல விஷயங்கள் பேசப்படும் இடங்களில் இறைவன் அதை கேட்டுக் கொண்டிருப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜை நடந்தது. அதன்பின், அபிஷேக ஆராதனைகளுக்கு பின், சிறப்பு அலங்காரத்தில் மூலவர் வடுகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement