Advertisement

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர்

ஈரோடு: கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர் சங்கம், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஈரோடு அருகே நடந்தது. தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். செயலாளர் பொன்னையன் முன்னிலை வகித்தார்.
பவானிசாகர் அணையில் கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு தேவையான அளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்நிலையில் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு, 120 நாட்களுக்கு, 7.7 டி.எம்.சி., நீர் வழங்க அரசாணை வெளியிட்டு, நீர் திறக்கப்பட்டுள்ளது. இச்செயல், கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையை பறிக்கும் நடவடிக்கையாகும். காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றினர். ஆயக்கட்டு நில உரிமையாளர் சங்க பொருளாளர் சண்முகராஜ், சதாசிவம், ராமசாமி, ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement