Advertisement

வேருடன் சாய்ந்த மரத்தை அகற்றாமல் மெத்தனம் கீழ்பவானி வாய்க்கால் உடையும் அபாயம்

காங்கேயம்,: பவானிசாகர் அணை யில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரால், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில், 2.௦௭ லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் ஆயிரக்கணக்கான
பழமையான மரங்கள் உள்ளன.

இந்நிலையில் காங்கேயம் அருகே சிக்கம்பாளையம், பாரதிபுரம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் மீது, 10 நாட்களுக்கு முன் ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. வாய்க்காலில் தற்போது தண்ணீர் செல்வதால், மரத்தின் மீது புதர் மண்டி, இறந்த விலங்குகள் ஒதுங்கி வருகின்றன. இதே நிலை நீடித்தால் குப்பை குவிந்து, வாய்க்கால் உடைந்து விடும் அபாயம் உள்ளது. மேலும், தற்போது மழை பெய்து வருவதால் வாய்க்காலில் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள், மெத்தனத்தை தொடராமல், மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement