Advertisement

குறைதீர் கூட்டத்தில் குவிந்த கோரிக்கை நிறைவேற்றுமா ஆசனூர் வனத்துறை?

சத்தியமங்கலம்: வனத்துறை தொடர்பான குறைதீர் கூட்டம், ஆசனுார் மாவட்ட வன அலுவலகத்தில், மாவட்ட வன அலுவலர் சுதாகர் தலைமையில் நேற்று நடந்தது.
விவசாயிகளுக்கு வனத்துறை உறுதுணையாக இருக்க வேண்டும். விளைநிலங்களை பாதுகாக்க அகழி அமைக்க வேண்டும். ராமரனை வன கிராமத்துக்கு மின் வசதி ஏற்படுத்த வேண்டும். பெஜலட்டி பள்ளி குழந்தைகளுக்கு, வனத்துறை மூலம் வாகன வசதி செய்து தர வேண்டும். வனப் பொருட்களை சேகரம் செய்ய அனுமதிக்க வேண்டும். தாளவாடி, ஆசனுாரில் இருந்து விவசாய விளைபொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், இரவில் மேலே வர பண்ணாரி சோதனை சாவடியில் அனுமதிக்க பரிந்துரைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து மாவட்ட வன அலுவலர் கூறியதாவது:
விவசாயிகள், மக்களின் நியாயமான கோரிக்கைகள், புலிகள் சரணாலய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நிறைவேற்றப்படும். வரும், 8ம் தேதி கோபி ஆர்.டி.ஓ.,விடம் ஆலோசித்து, மலைவாழ் மக்கள் வனப் பொருட்கள் சேகரம் செய்ய ஏற்பாடு செய்து தருகிறோம். விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான ஆழமான அகழி தோண்டுவது, ரயில் தண்டவாள கம்பி பயன்படுத்தி தடுப்பு வேலி அமைக்கும் கோரிக்கையை, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். இனிவரும் கூட்டங்களில் கோரிக்கைகளை, மனுவாக எழுதி கொடுங்கள். அப்போதுதான் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பவானிசாகர்
எம்.எல்.ஏ., பண்ணாரி, வனச்சரக அலுவலர்கள், தாளவாடி, ஆசனுார் போலீசார், தாளவாடி வருவாய் துறையினர், மின்வாரிய அதிகாரிகள், தாளவாடி விவசாய சங்க நிர்வாகிகள், பழங்குடி மக்கள் சங்க நிர்வாகிகள், கிராம ஊர் தலைவர், வனக்குழு தலைவர், விவசாயிகள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement