Advertisement

திருட்டு புகார்கள் எதிரொலி ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இரவு ரோந்து

ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில், சில வாரங்களாக தொடர் திருட்டு நடந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். இதையடுத்து பஸ் ஸ்டாண்டில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தவும், எஸ்.பி., ஜவஹர் உத்தரவிட்டார்.
இதன்படி டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில், 10க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று முன்தினம் இரவு முதல், இரவு நேர பாதுகாப்பு பணியை துவங்கினர்.

பஸ் ஸ்டாண்டில் வெளி மாவட்ட பஸ்கள் நிற்கும் பகுதி, டவுன் பஸ்கள் நிற்கும் பகுதி, கடை, பஸ் ஸ்டாண்டின் சுற்றுப்பகுதியிலும் ரோந்தில் ஈடுபட்டனர். பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரம் சுற்றிய நபர்களை எச்சரித்து அனுப்பினர். சந்தேக நபர்களை அழைத்து விசாரித்து, விபரங்களை பதிவு செய்தனர்.
பஸ் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராக்களை, 24 மணி நேரமும் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தும், பஸ் ஸ்டாண்டில் உள்ள புறநகர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும் கண்காணிக்க, தனி நபர்கள் நியமிக்கப்பட்டனர்.
பஸ் ஸ்டாண்டில் மக்கள், பயணிகளிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் சில திருநங்கைகளை எச்சரித்தும், குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பினர். வரும் நாட்களில், இரவு நேர ரோந்து தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement