Advertisement

மக்களை தேடி மருத்துவ ஊழியர் பணி நிரந்தரம் கோரி வலியுறுத்தல்

ஈரோடு: மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் தலைவர் ரேவதி, செயலாளர் தனலட்சுமி ஆகியோர் தலைமையில், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது:
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள், ஒரு நாளில், 2 மணி நேரம் என்றும், 20 பேரை பரிசோதிக்க இலக்கு நிர்ணயித்தனர். அவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கண்டறியும் குளுக்கோ மீட்டர் போன்ற சாதனங்கள் வழங்கினர். தினமும், 20 பேர் என்பதை, 40 பேரை பரிசோதிக்கவும், குளுக்கோ மீட்டருக்கு தேவையான பேட்டரி செல், பதிவுகளை அனுப்பும் செயலிக்காக ஆன்ட்ராய்டு போன், அதற்கான டேட்டா, குறிப்பேடு நோட்டுகள், போக்குவரத்து செலவையும் நாங்களே செய்யும் நிலை உள்ளது.

தற்போது ஆண், பெண் என இருபாலருக்கும் வாய் புற்று நோய், பெண்களுக்கு கர்ப்பப்பை வாய், மார்பக புற்று நோய் கண்டறிய கூறியுள்ளனர். தவிர பிரதமர் காப்பீடு திட்டத்தில் குடும்பத்தில் ஒருவரை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பலர் செய்யும் பணிகளை எங்களுக்கு வழங்கி, நாள் முழுவதும் பணி செய்யும்படி பணிக்கின்றனர். இதற்காக மாதம், 5,500 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்குகின்றனர்.
இதை மாற்றி எங்களுக்கு காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வேலை நிர்ணயிக்க வேண்டும். மாதம், 26,000 ரூபாய் ஊதியம் நிர்ணயித்து, முழு நேர பணியாளராக அங்கீகரிக்க வேண்டும். பணிக்கு தேவையான சாதனங்கள், செல்போன், பயண செலவு போன்றவற்றை அரசு வழங்க வேண்டும். கூடுதலாக சுமத்தப்பட்ட புற்று நோய் பரிசோதனை, காப்பீடு திட்ட பதிவுகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement