Advertisement

போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சங்கமம்

ஈரோடு: தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஓய்வு பெற்றோர் அமைப்பு சார்பில், பணியில் உள்ள தொழிலாளர்களுடன், ஓய்வூதியர்களின் சங்கமம், ஈரோடு, காசிபாளையம், அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் நேற்று நடந்தது.
அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளன மாநில பொருளாளர் குணசேகரன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., சங்கம் ஜான் கென்னடி முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் ஒப்பந்த பலன், டீ.ஏ., உயர்வை வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதுகுறித்த மனுவை மண்டல அலுவலகத்தில் வழங்கினர்.

* போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்க கூட்டமைப்பு சார்பில், கோபி பஸ் ஸ்டாண்டில் உள்ள பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு, நேற்று விழிப்புணர்வு பிரசார நோட்டீஸ் வழங்கப்பட்டது. தலைவர் நடராஜ், செயலாளர் துரைராஜ், துணை பொது செயலாளர் பாலக்கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement