Advertisement

புளியம்பட்டி தொழிலாளி மர்மச்சாவில் மகன் கைது

பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே பனங்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் பாபு, 58, கூலி தொழிலாளி. கடந்த, 1ம் தேதி இரவு தலையில் ரத்த காயமடைந்து கிடந்தவரை, அப்பகுதி மக்கள் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் இறந்தார். அவரின் மனைவி வசந்தாமணி அளித்த புகாரின்படி, புன்செய்புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
உடற்கூறு பரிசோதனை அறிக்கையில், கல்லால் தாக்கப்பட்டதில் பாபு உயிரிழந்தது தெரிந்தது. இதனால் கொலை வழக்காக மாற்றினர். இந்நிலையில் தந்தையின் சாவுக்கு, நான் தான் காரணம் என்று, மகன் சதீஷ்குமார், ௨௮, ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து அவரை நேற்று கைது செய்த போலீசார், சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: குடிபோதையில் மனைவியிடம் பாபு, அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறை அறிந்து, சதீஷ்குமார் வந்துள்ளார். தந்தையை கண்டித்தபோது, கல்லை எடுத்து மகனை தாக்க வந்துள்ளார்.
அதை தடுக்க முயன்று தள்ளி விட்டதில் கல்லோடு விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்த பாபு இறந்துள்ளார். சதீஷ்குமாருக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. சத்தியமங்கலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவ்வாறு போலீசார் கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement