Advertisement

மகளிர் குழு பெண் மோசடி; போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகராட்சி அண்ணா நகரை சேர்ந்தவர் சிந்து, 32; அப்பகுதி மகளிர் குழு மூலம், 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்து, அவர்களுக்கு தெரியாமல், தனியார் நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் லோன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நிதி நிறுவன ஊழியர்கள், தவணைத்தொகை செலுத்துமாறு கேட்டபோதுதான், தங்களின் பெயரில் லோன் பெற்று, சிந்து ஏமாற்றியதை அறிந்தனர். பாதிக்கப்பட்ட, ௩௦க்கும் மேற்பட்ட பெண்கள், சிந்து மீது புளியம்பட்டி போலீசில் புகாரளித்தனர். நான்கு மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட பெண்கள், போலீசாரை கண்டித்து, புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை நேற்று மதியம் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து சிந்துவின் பெற்றோரை வரவழைத்து, போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய பணத்தை திருப்பி அளிப்பதாக எழுத்துப்பூர்வமாக, அவர்கள் உறுதி யளிக்கவே, பெண்கள் கலைந்து சென்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement