Advertisement

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு; இருவரிடம் என்.ஐ.ஏ., விசாரணை

கோவை:கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை, கஸ்டடி எடுத்த என்.ஐ.ஏ., போலீசார், கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்தாண்டு, அக்., 23ம் தேதி, கார் குண்டு வெடிப்பு நடந்தது.

குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட, இதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபீன் இதில் பலியானார். இவ்வழக்கை, தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கில் இதுவரை, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவ., 2ம் தேதி, போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த தாஹா நசீர், 27 என்பவர், 14வது நபராக கைது செய்யப்பட்டார்.

கார் சர்வீஸ் நிறுவனத்தில், பெயின்டராக பணிபுரிந்த அவர், கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த சில தினங்களுக்கு முன், ஜமீசாமுபீனை சந்தித்து பேசியது, விசாரணையில் தெரிந்தது.

இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டிருந்ததும், கார் குண்டுவெடிப்புக்கு முந்தைய தினம் சந்தித்ததும் தெரிந்தது.

இதேபோல், ஏற்கனவே கைதான முகமது இத்ரீஸ், 25 என்பவரும், ஜமீஷா முபீன் உடன் பேசியது தெரிந்தது. இதையடுத்து தாஹா நசீர், முகமது இத்ரீஸ் ஆகிய இருவரையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணைக்காக காவலில் எடுத்தனர்.

இருவரையும் நேற்று முன்தினம் இரவு, கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ., முகாம் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். நேற்று இருவரிடமும் விசாரணை நடந்தது. ஆறு நாட்கள் கஸ்டடி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜமேஷா முபீனை அவர்கள் சந்தித்த இடங்கள், வீடுகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement