Advertisement

கைதான பெண்ணின் தாயிடம் 800 கிராம் தங்க நகை மீட்பு

கோவை;நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான பெண்ணின் தாயாரிடம் இருந்து, 800 கிராம் நகைகளை மீடகப்பட்டது.

கோவை காந்திபுரம், 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கடந்த, 27ம் தேதி நள்ளிரவு புகுந்த மர்மநபர் கடையில் இருந்த தங்கம், வைரம், பிளாட்டினம், உட்பட, 4 கிலோ, 600 கிராம் நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

இதில் தொடர்புடைய தர்ம புரியை சேர்ந்த விஜய், 24 என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரது மனைவி நர்மதாவை கைது செய்த போலீசார், 3 கிலோ, 200 கிராம் நகைகளை மீட்டனர்.இந்நிலையில், தர்மபுரி, கெம்பளஹல்லி சென்ற தனிப்படைப் போலீசார் அங்கு இருந்த நர்மதாவின் தாயார், யோகராணி, 52 என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜய், அவரிடம், 800 கிராம் நகைகளை கொடுத்து வைத்திருந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் யோகராணியிடம் விசாரித்து வருகின்றனர்.



வாசகர் கருத்து (1)

  • RADE - loch ness,யுனைடெட் கிங்டம்

    ஏற்கனவே காசு வாங்கிட்டாங்க போல போன கொள்ளையில் இப்போ ஆள விட்டுட்டு நகை மட்டும் மீட்டு இருக்காங்க அவன் அவ்வளோ தான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement