Advertisement

சிவில் சப்ளை குடோனில் பாதுகாப்பு வசதி இல்லை 

ADVERTISEMENT
வால்பாறை;வால்பாறையில், சிவில் சப்ளை குடோனுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.

வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழத்திற்கு சொந்தமான சிவில்சப்ளை குடோன் உள்ளது. இந்த குடோனிலிருந்து, வால்பாறையில் உள்ள, 48 ரேஷன் கடைகள், 91 சத்துணவு மையங்கள், 42 அங்கன்வாடி மையங்கள், அரசு மாணவர்கள் மற்றும் மாணவியர் விடுதிகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, ஆயில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சிவில் சப்ளை குடான் சுற்றுச்சுவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்தது. இதனால், குடோனுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.

வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் நிலையில், சிவில் சப்ளை குடோனுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், யானைகள் உள்ளே வர வாய்ப்புள்ளது. அதனால், குடோனுக்கு சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிவில்சப்ளை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'குடோனுக்கு சுற்றுச்சுவர், நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கேட் உள்ளிட்டவை மீண்டும் கட்ட வேண்டும் என, உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். இதற்கான உத்தரவு வந்ததும், பணிகள் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement