Advertisement

வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்; 11 பேரை கைது செய்த போலீசார்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, வடமாநில தொழிலாளர்களை தாக்கிய, தமிழக தொழிலாளர்கள் உள்ளிட்ட, 11 பேரை கோட்டூர் போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே சமத்துாரில் தனியார் ஸ்பின்னிங் மில்லில், ஒடிசா மாநிலத்தைச்சேர்ந்த, 60 தொழிலாளர்கள், அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். மேலும், அதே வளாகத்தில் உள்ள இயந்திரம் தயாரிப்பு நிறுவனத்தில், 10 தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்கள் அம்மார், ஜீசா, ஓம்பிரகாஷ், திலிப் ஆகியோர், ஒடிசா செல்வதற்காக, பைகளுடன் தங்களுடன் தங்கியிருந்த, தமிழ் பேசும் வடமாநில தொழிலாளர் ரக்சன் உடன் நடந்து சென்றனர்.

அப்போது, இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தைச்சேர்ந்த தொழிலாளி தீபக், கருணாகரன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர், வடமாநில தொழிலாளர்களிடம், புகையிலை கேட்டனர். அதற்கு அவர்கள் இல்லை எனக்கூறியதால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து ரக்சன், நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், உடனடியாக வந்து காரில் வடமாநிலத்தவர்களை ஏற்றி, கோவைக்கு ரயில் நிலையத்துக்கு ரக்சனுடன் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மதுபோதையில் இருந்த தமிழக தொழிலாளர்கள், நண்பர்களுக்கு போன் செய்து, வடமாநிலத்தவர் அடித்து விட்டதாக கூறினர்.

அதன் பேரில் அங்கு வந்த நண்பர்களுடன் சேர்ந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையை சேதப்படுத்தியதுடன், வடமாநில தொழிலாளர்களை தாக்கினர்.

தில், மனோஸ்குமார், 21, 18 வயதான மூவர் உள்ளிட்டவர்களும், பெத்தநாயக்கனுாரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், கருணாகரன் ஆகியோரும் காயமடைந்தனர்.

இது குறித்து, கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெத்தநாயக்கனுாரை சேர்ந்த கருணாகரன், 19, நவநீதகிருஷ்ணன், 28, தீபக், 24, ராஜேஷ், 32, பால்ராஜ், 23, அஜித்குமார், 23, ஜீவானந்தம், 27 ஆகியோரும்; கொடைக்கானலைச் சேர்ந்த சிவராமன், 24, பொள்ளாச்சியை சேர்ந்த அஜய், 22, நல்லுாத்துக்குளியை சேர்ந்த தினேஷ்குமார்,30 உள்ளிட்ட, 11 பேரை கைது செய்தனர்.

மேலும், பெத்தநாயக்கனுார் சஜீத், 20, சுதான் ஆகியோரை தேடி வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement