Advertisement

ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை முயற்சி

கோவை:கோவையில், 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருபவர் முரளி. இவர் தற்கொலைக்கு முயன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முரளியின் மனைவி, மற்றும் சக டிரைவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர்.

முரளி தர்மபுரிக்கு பணி மாறுதல் கேட்டு கிடைத்ததாகவும், அதற்கு கண்காணிப்பாளர் மணிவண்ணன் அனுமதிக்கவில்லை எனவும், இதனால் மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement