Advertisement

மாவட்ட ஜிம்னாஸ்டிக் போட்டி



மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மதுரை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவர், மகளிர் ஜிம்னாஸ்டிக் போட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் நடந்தது.

மகளிர் போட்டி முடிவுகள்



14 வயது ப்ளோர் பிரிவில் சி.இ.ஓ.ஏ., மாணவி ரித்திகா, டேபிள் வால்ட், பீம், அன்ஈவன் பார் பிரிவுகளில் பவஸ்ரீ முதலிடம் பெற்றனர். குழுப்பிரிவில் சி.இ.ஓ.ஏ. முதலிடம், சித்து மெட்ரிக் பள்ளி 2ம் இடம், விராதனுார் அரசுப் பள்ளி 3ம் இடம் பெற்றன.

17 வயது ப்ளோர், டேபிள்வால்ட் பிரிவில் சவுராஷ்டிரா பள்ளி திவ்யதர்ஷினி, பேலன்சிங் பீம், அன்ஈவன் பார் பிரிவுகளில் செயின்ட் ஜோசப் பள்ளி கோபிகா முதலிடம் பெற்றனர். குழுப்பிரிவில் மகபூப்பாளையம் அரசுப் பள்ளி முதலிடம், விராதனுார் அரசுப் பள்ளி 2ம் இடம் பெற்றன.

19 வயது ப்ளோர் பிரிவில் சவுராஷ்டிரா பள்ளி ஹரிணி, டேபிள்வால்ட், பீம், அன்ஈவன் பார் பிரிவுகளில் மகபூப்பாளையம் அரசுப் பள்ளி மாணவிகள் ரம்யா, கனகா, ஸ்ரீராகவி முதலிடம் பெற்றனர். குழுப் போட்டியில் சவுராஷ்டிரா பள்ளி முதலிடம், மகபூப்பாளையம் அரசுப் பள்ளி 2ம் இடம், விராதனுார் அரசுப் பள்ளி 3ம் இடம் பெற்றன.

ஆடவர் பிரிவு முடிவுகள்



14 வயது ப்ளோர், டேபிள் வால்ட், பொம்மல் ஹார்ஸ், ஹரிஸான்டல், ரிங்ஸ் மற்றும் பாரலல் பார் பிரிவுகளில் ஏ.டி.டி.டி. பள்ளி மாணவர் விஷ்ணுவர்தன் முதலிடம் பெற்றார். குழுப்போட்டியில் ஏ.டி.டி.டி. பள்ளி முதலிடம், சி.இ.ஓ.ஏ. 2ம் இடம், டி.மாடல் பள்ளி 3ம் இடம் பெற்றன.

17 வயது ப்ளோர், டேபிள் வால்ட், பொம்மல் ஹார்ஸ், ஹரிஸான்டல், ரிங்ஸ் மற்றும் பாரலல் பார் பிரிவுகளில் ஏ.டி.டி.டி. பள்ளி மாணவர் அக்ஷய ப்ரியன் முதலிடம் பெற்றார். குழுப்போட்டிகளிலும் இம்மாணவர்கள் முதலிடம் பெற்றனர். 19 வயது ப்ளோர், டேபிள் வால்ட், பொம்மல் ஹார்ஸ், ஹரிஸான்டல், ரிங்ஸ் மற்றும் பாரலல் பார் பிரிவுகளில் லீ சாட்லியர் பள்ளி மாணவர் பிரஜித் முதலிடம் பெற்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement