Advertisement

போலீசார் நினைத்தால் மணல் கடத்தலை தடுக்க முடியும்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audioதிருநெல்வேலி : தாமிரபரணியில் மணல் கடத்தலுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணனுக்கு நான்காவது ஆண்டாக போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. போலீசார் முயன்றால் மட்டுமே மணல் கடத்தலை தடுக்க முடியும் என்கிறார் அவர்.

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் துவங்கி துாத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் வரையிலும் 130 கி.மீ., பாய்ந்து கடலில் கலக்கிறது தாமிரபரணி.

பள்ளங்களில் மூழ்கி பலிதுாத்துக்குடியில் 46,000 ஏக்கர்; திருநெல்வேலியில், 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் நேரடி பாசனம் வாயிலாக 86,000 ஏக்கர் நெல் உற்பத்திக்கு தாமிரபரணி அடித்தளம் அமைக்கிறது.

திருநெல்வேலி, துாத்துக்குடி ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

மணல் கடத்தலால் தாமிரபரணி பாதிக்கப்படுகிறது. முக்கூடல் போன்ற பகுதிகளில் மணல் அள்ளிய பள்ளங்களில் மூழ்கி, பலர் பலியாவதும் தொடர்கிறது.

துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 46; 10ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றவர். வல்லநாடு ஊராட்சியில் அகரம் வார்டு உறுப்பினர்.

மணல் கடத்தலை தடுக்க இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளால் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன.

இது குறித்து, அவர் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு தினமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க, 2020ல் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி உத்தரவிட்டனர்.

போலீஸ் பாதுகாப்புகடந்த 2020 நவ., 19 முதல் அவருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த மாதத்துடன் போலீஸ் பாதுகாப்புடன் அவர் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இது குறித்து பாலகிருஷ்ணன் கூறியதாவது:

நம் கண் முன்பாக மணல் எனும் கனிம வளத்தை சுரண்டுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. முறப்பநாடு போலீசில் தகவல் தெரிவித்தால், அந்த புகார் மீண்டும் என் காதுகளுக்கே வந்தது.

நீதிமன்ற உத்தரவின் படி, மூன்று ஆண்டுகளாக எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது என் கிராமம் அகரத்தில் மணல் கடத்தல் ஓரளவு குறைந்துள்ளது.

மணல் கடத்தல்காரர்களும், அதற்கு உடந்தையாக இருக்கும் ஒரு சில போலீசாரும் என் மீது ஆத்திரத்தில் உள்ளனர். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. என் பணி தொடர்கிறது.

என் வீட்டிற்கு பக்கத்தில் ஆற்றுப்பகுதியில் ஒரு மடை கட்டுவது தொடர்பாக பார்க்க சென்றிருந்தேன். பாதுகாப்பு போலீசும் உடன் வந்தார். அப்போது, அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த கும்பலும், அவர்களுடன் இருந்த போலீசாரும் என்னை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

போலீஸ் ரோந்து இல்லைஅவர்கள் என் மீது இன்னும் தவறான தகவல்களையே கூறி வருகின்றனர். வருவாய்த் துறையினரோ, பொதுப்பணித்துறையினரோ யார் நினைத்தாலும் மணல் கொள்ளையை தடுக்க முடியாது.

போலீசார் நினைத்தால் மட்டுமே முழுமையாக தடுக்கலாம். மணலை கடத்தக்கூடாது என்ற எண்ணமும் ஒவ்வொரு தனி நபருக்கும் வர வேண்டும்.

தற்போதும் மணல் கடத்தல் தொடர்கிறது. முறப்பநாடு போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட மற்ற கிராமங்களில் தொடர்ந்து மணல் கடத்தல் நடக்கிறது. போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரியும்.

மணல் கடத்தல் கும்பல் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தால், அந்த கும்பலுக்கு போலீசாரே தகவல் சொல்வது இன்னமும் தொடர்கிறது. இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் முறையாக ரோந்து செல்வதில்லை.

முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லுார்து கொலையுண்ட சம்பவத்திற்கு பிறகு, சற்று குறைந்திருந்த மணல் கடத்தல், மீண்டும் ஜோராக நடந்து வருகிறது.

மற்ற பகுதிகளில் எப்படியோ, தாமிரபரணி ஆற்றுப்பகுதிகளில் மட்டுமாவது உளவுத்துறையிலும், போலீசிலும் ஓரளவு நல்ல அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

அப்படி செய்தால் மணல் கடத்தலை முழுமையாக தடுக்கலாம். தாமிரபரணியை காப்பாற்றலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து (11)

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  நினைப்பதா ?? அவர்களின் ஆசி, வழிகாட்டுதல்களுடன்தான் நடக்குது ன்றாங்களே ????

 • DVRR - Kolkata,இந்தியா

  அதனால் என்ன பலன் ??? கமிஷன் வராதே ???ஆகவே நாங்கள் ஒருக்காலும் தடுக்கமாட்டோம் - இப்படிக்கு டாஸ்மாக்கினாட்டு திராவிட மடியல் அரசு அடிமை காவல் துறை

 • sankar - Nellai,இந்தியா

  ஆள்பவர்களை மீறி ஒன்றும் செய்துவிட முடியாது

 • Venkataraman - New Delhi,இந்தியா

  காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியாது. மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது ஆளும் கட்சியினர். அவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது.

 • Ram pollachi -

  கட்டிடங்கள் கட்ட மணல் தேவைப்படுகிறது, மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை, கட்டிடங்கள் கட்ட கடுமையான சட்டங்களை நடைமுறைபடுத்தினால் கனிமங்கள் தப்பிக்கும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement