Advertisement

நியோ மேக்ஸ் மோசடி 74 வயது மூதாட்டி கைது



மதுரை : மதுரை நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் ஏஜென்ட் ஆக இருந்து பணம் வசூலித்து கொடுத்த விருதுநகர் செல்லம்மாள் 74, கைது செய்யப்பட்டார்.

மதுரை எஸ்.எஸ்.காலனியில் நியோ மேக்ஸ் நிறுவனம் செயல்பட்டது. கூடுதல் வட்டி, வீட்டு மனை தருவதாக கூறி ரூ. பல ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டது. நிறுவனர் பாலசுப்பிரமணியன், இயக்குநர்கள் கமலகண்ணன், வீரசக்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று செல்லம்மாளை டி.எஸ்.பி., மணீஷா மற்றும் போலீசார் கைது செய்தனர். செல்லம்மாள் ஏஜென்ட் ஆக இருந்து 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ.40 லட்சம் வரை வசூலித்து இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளார். அதற்காக நிறுவனம் சார்பில் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து சுற்றுலா சென்றுள்ளார். செல்லம்மாள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement